TNPSC VAO
Type | Offline |
Category | TNPSC EXAMS |
Last Date For Applying | Will update soon |
Exam Date | Will update soon |
Start Preparing for Exam |
Website | http://www.tnpsc.gov.in/latest-notification.html |
Notification Date | Will update soon |
Last Date to apply | Will update soon |
For General category candidates: 21 years – 30 years
For SCs, STs, MBCs/DCs, BCs/ BCMs and DWs: 21 years – 40 years
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப்பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப் பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப் பெற்ற முதல் தேர்வாணையமாகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் உதவியாளர் முதல் வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் அல்லது இது போன்ற முதன்மை பணிகளுக்கு தேவையனவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யும் பணிகளை செய்கிறது.
இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை:
கட்டணம் செலுத்தும் முறை:
குறிப்பு : தேர்வாணைத்தால் அறிவிக்கப்படும் நிரந்தரப் பதிவு எண் / பிரத்யேக எண் மற்றும் கடவுச்சொல் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தால் அவ்வப்பொழுது அறிவிக்கப்படும் அறிவிக்கைக்கு ஏற்ப விண்ணப்பிக்கப்பட வேண்டும். நிரந்தரப் பதிவு முறையானது தேர்வாணையத்தால் அறிவிக்கப்படும் எந்த ஒரு பதவிக்கும் விண்ணப்பமாக ஏற்றுக் கொண்டதாக கருத இயலாது.
கல்வித்தகுதி :
குறிப்பு:
இடைநிலையில்(Intermediate) தேர்ச்சி, முதுநிலையில் தேர்ச்சிக்கு சமமானதாக கருதப்படாததால், இடைநிலையில் தேர்ச்சிப் பெற்றவர்கள் இளநிலையில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான புலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கேள்வித்தாள் அப்ஜக்ட்டிவ் முறையில் இருக்கும். அதேபோல ஒவ்வொரு கேள்வியும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் அமைந்திருக்கும்.
விண்ணப்பதாரர்கள் அவர்கள் விருப்பப்பட்ட மொழிப்பிரிவை தேர்வு செய்து தேர்வு எழுதலாம். எழுத்துத் தேர்வுக்கான மொத்த நேரம் 3 மணி. மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இரண்டு பிரிவுகளாக இருக்கும்.
முதல் பிரிவில் பொது அறிவும் ஆப்டிட்யூட் பிரிவும் இருக்கும். பொது அறிவில் பிரிவில் 75 கேள்விகளும், VAO- 25 கேள்விகளும் கேட்கப்படும். இரண்டாம் பிரிவில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவுகள் இருக்கும். அதில் மொத்தம் 80 கேள்விகள் கேட்கப்படும். ஆப்டிட்யூட் பிரிவில் 20 கேள்விகள் கேட்கப்படும்.
ஒவ்வொரு கேள்விக்கும் தலா 1.5 மதிப்பெண்கள். தவறான கேள்விக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது என்பது இந்தத் தேர்வின் சிறப்பம்சம். மொத்த மதிப்பெண்கள் 300. அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்கள் 90.
இந்தத் தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கான பாடத்திட்டம் முழுவதும் பத்தாம் வகுப்பு தரத்தில் இருக்கும் என்பதையும் விண்ணப்பதாரர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
Full Test : Learning Mode | 20 Credits |
Full Test : Testing Mode | 15 Credits |
Previous Year Papers | 10 Credits |