பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட வெளிநாட்டுக் கொள்கை திட்டமிடலுக்கான பிரிக்ஸ் கூட்டம் (BRICS Policy Planning Dialogue) பீகாரின் பாட்னா நகரில் 2016 ஜூலை 25, 26 ஆகிய இருநாட்கள் நடைபெற்றன. இதன் மையக்கருத்து அனைவரையும் உள்ளடக்கிய பொறுப்பு மிகுந்த கூட்டுத் தீர்வுகள் (Building Responsive, inclusive and collective Solutions) என்பதாகும்.
சர்வதேச விவகாரங்களிலும் சர்வதேச அமைப்புகளிலும் பிரிக்ஸ் அமைப்பு மேற்கொள்ள வேண்டிய முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் அதில் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்க இக்கூட்டம் நடத்தப்பட்டது.