இந்தியக் கிரிக்கெட் கமிட்டியினை சீரமைப்பதுடன் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்தும் நோக்குடன் முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் உச்சநீதிமன்றத்தினால் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அக்கமிட்டி தனது பரிந்துரைகளை 2016 ஜனவரியில் வழங்கியது. அப்பரிந்துரைகளை இந்தியாவிலுள்ள மாநில கிரிக்கெட் சங்கங்களும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் எதிர்த்தன. இந்நிலையில் 2016 ஜூலை 18 அன்று லோதா கமிட்டியின் பரிந்துரைகளில் பெரும்பாலானவை ஏற்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தினால் ஏற்கப்பட்டுள்ள சில பரிந்துரைகள்
1. அமைச்சர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்டோர் BCCI- ல் பதவிகளை வகிக்கத் தடை. எந்தவொரு பதவியையும் மூன்று வருடங்களுக்கு மேல் ஒரேநபர் வகிக்கக்கூடாது.
2. BCCI-ல் கிரிக்கெட் வீரர்களுக்கென தனியாக ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
3. BCCI-ல் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது ஒவ்வொரு மாநிலத்தின் சார்பில் ஒரு சங்கம் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.
4. இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரும் (CAC) BCCI நிர்வாகக் குழுவில் இடம்பெற வேண்டும்.