மத்திய அரசு 2021 மார்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கத்தினை 4 சதவிகிதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதிக்கொள்கைக்குழு (Monetary Policy Committee- MPC) ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்குமிடையே ஏற்பட்ட நிதிக்கொள்கை வடிவமைப்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட பணவீக்க இலக்கிலிருந்து 2 சதவிகிதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம் என்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கினை எட்ட தகுந்த நிதிக் கொள்கைகளின் மூலம் பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி முயற்சிகளை மேற்கொள்ளும்.