அதிகரித்து வரும் தொழிற்சாலை மற்றும் வாகன மாசு, காடுகள் அழிக்கப்படல், பசுமை இல்ல வாயுக்களின் வெளியூடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2016-ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிகபட்ச வெப்பம் நிலவுவதாக ஐ.நா. வானிலை ஆராய்ச்சி முகமை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் எல் நினோவின் தாக்கத்தினால் உலகளாவிய வெப்பநிலை அதிகரித்த நிலையில் தற்பொழுது ஏற்படும் வெப்பநிலை உயர்வானது பருவநிலை மாற்றத்தால் ஏற்படுவதாகக் கருத்து தெரிவித்துள்ளது.
19-ஆம் நூற்றாண்டில் இருந்ததைவிட 2016-ஆம் ஆண்டின் முதல் ஆறுமாதங்களில் 1.3°C கூடுதல் வெப்பநிலைப் பதிவாகியுள்ளதாக ஐ.நா. வானிலை முகமை தெரிவித்துள்ளது.